பரமக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
44 வருடங்கள் திரைத்துறையில் பங்காற்றிய ரஜினிக்கு விருது வழங்கியது எனக்கு பெருமையாக உள்ளது. சக நடிகராக அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல்வாதியாக கூற வேண்டுமென்றால் விருது வழங்கிய கட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எனது தந்தையின் புகைப்படத்திற்குப் பதிலாக எனது இடத்தில் சிலை வைக்கிறேன். யாருடைய வழிப்பாட்டிற்காகவும் நான் சிலை திறக்கவில்லை. ஒரு நபரின் நியாபகத்திற்காகதான் சிலை திறக்கிறேன் என்றார்.
மதுரை விமான நிலையத்தில் கமல் ஹாசன் பேட்டி மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டங்கள் கொண்டுவந்துள்ளதாக கூறி வருகின்றன அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “லட்சங்கள் வேறு; திட்டங்கள் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ‘திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை; அவர் பொதுவானவர்’ - கமல் ஹாசன்!