தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘குடும்ப அரசியல், குழப்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மய்யத் தலைவரே’ - தூங்காநகரை கலக்கும் கமலின் படை!

மதுரை: ‘குடும்ப அரசியல், குழப்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மய்யத் தலைவரே’ என நடிகர் கமலின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

‘குடும்ப அரசியல்..குழப்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மய்யத்தலைவர்’ -மதுரையில் கலக்கும் கமலின் படை!
‘குடும்ப அரசியல்..குழப்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மய்யத்தலைவர்’ -மதுரையில் கலக்கும் கமலின் படை!

By

Published : Nov 4, 2020, 3:24 PM IST

மதுரையில் கடந்த சில நாள்களாக ரஜினியின் ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக அவரை அரசியலுக்கு வரச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் களத்தில் குதித்துள்ளனர். 'குடும்ப அரசியல், குழப்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மய்யத் தலைவரே' என நகர் முழுவதும் திமுக, அதிமுக, ரஜினியை குறிவைத்து சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நவம்பர் 7 நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக இந்தச் சுவரொட்டிகள் அனைத்தையும் நகர் முழுவதும் ஒட்டி தனது பக்கமும் மக்களின் பார்வையை திருப்பியுள்ளது கமலின் படை.

இதையும் படிங்க...கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? மக்களின் பிரார்த்தனை நிறைவேறுமா?

ABOUT THE AUTHOR

...view details