தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரப்புரைக்கு விதித்த தடை காரணமாக மக்களை பார்த்து கையசைத்து சென்ற கமல் - makkal needhi maiam

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்கு மதுரையில் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களைப் பார்த்து கையசைத்து மட்டும் சென்றார்.

kamal haasan election campaign in madurai
பரப்புரைக்கு விதித்த தடை காரணமாக மக்களை பார்த்து கையசைத்து சென்ற கமல்

By

Published : Dec 13, 2020, 9:22 PM IST

மதுரை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு மேலமாசி வீதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காவல்துறையினர் தடையின் காரணமாக அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து மட்டும் சென்றார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கமல் ஹாசனுக்கு மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மக்களை பார்த்து கையசைத்து சென்ற கமல்
இன்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் நடிகர் கமல் ஹாசன் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குவதாக இருந்தது. கரோனா காரணமாக பரப்புரைக்கு மதுரை காவல்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பொதுமக்களையும், தொண்டர்களையும் பார்த்து கையசைத்து மட்டும் சென்றார்.
காரில் இருந்தபடி கையசைத்த கமல்

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கமல் ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னதாக, காலை மதுரை விமான நிலையத்தில், சட்டத்துக்கு உட்பட்டுதான் பரப்புரையை மேற்கொள்வேன் என கமல் ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details