தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சிக்கியது இவ்வளவு... சேமித்தது எவ்வளவு?’ - கமல்ஹாசன் கேள்வி - madurai

மதுரை: பறக்கும்படை சோதனையில் சிக்கியது இவ்வளவு, சேமித்தது எவ்வளவு என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

kamal

By

Published : May 6, 2019, 8:26 AM IST

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் வருகின்ற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சக்திவேல் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை அவனியாபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய கமல், “மக்களவைத் தேர்தலுக்கான பறக்கும்படை சோதனையில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் சிக்கியுள்ளது. சிக்கியது இவ்வளவு தொகை என்றால், அதிமுக - திமுக இரண்டு கட்சிகளும் சேமித்து வைத்திருப்பது எவ்வளவு தொகை இருக்கும்?” என்று வினவினார். தொடர்ந்து பேசிய அவர், இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகச் சாடினார்.

கமல்ஹாசன் பரப்புரை

இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சிநேகன், அக்கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details