மதுரை: உலகப் புகழ்வாய்ந்த மதுரை சித்திரை திருவிழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் முக்கிய நிகழ்வு வரும் ஏப். 16ஆம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகர் எழுந்தருளக்கூடிய தங்கக் குதிரை வாகனம், கருட மற்றும் சேஷ வாகனம் ஆகியவை இன்று (ஏப்.11) காலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி அழகர் கோவிலில் நடைபெற்றது.
'கள்ளழகரின் தங்கக் குதிரை தயார்...': மதுரையில் களை கட்டும் சித்திரை திருவிழா
மதுரையில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதற்கான தங்கக் குதிரை வாகனம், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்தது. வரும் ஏப். 16ஆம் தேதி கள்ளழகர் இந்தக் குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
’கள்ளழகரின் தங்கக் குதிரை தயார்..!’ : மதுரையில் கலை கட்டும் சித்திரைத் திருவிழா
முன்னதாக, இந்தத் தங்கக் குதிரை வாகனம் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனங்களுக்கு திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சீர்பாதத்தினரால் ( ஸ்ரீ கள்ளழகரை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்பும் வரை சுமப்பவர்கள்) மதுரைக்கு வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டு, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்து சேர்ந்தது.
Last Updated : Apr 12, 2022, 9:18 AM IST