தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் அனைத்தையும் தடையின்றி பெற உதவவேண்டும் - நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

மாற்றுத்திறனாளிகள், அனைத்தையும் தடையின்றி அணுகுவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்; இதனை நமது வீட்டில் இருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 8, 2022, 5:43 PM IST

மதுரை:விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்திலுள்ள சர்வே எண் 16746 நிலத்தினை ஆய்வு செய்யக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மறுசீராய்வு செய்யக்கோரி மாலதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார்.

2022 ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று காளீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து இந்த நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வே எடுக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதில் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் கிழமை நீதிமன்றம் நிலங்களை ஆய்வு செய்வதற்கு வழக்கறிஞர் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் மனுதாரரின் சீராய்வு மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்ற நீதிபதியிடம் சில கருத்துகளை சொல்ல விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதி, 'நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடந்த சில நாள்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை கொண்டாடினோம். இந்த வேலையில் மாற்றுத்திறனாளிகள் அனைத்தையும் எந்தவித தடையும் இன்றி அணுகுவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வருங்காலத்தில் வழக்கறிஞர்கள் ஆணையம் நியமிக்க கூடிய வழக்குகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பார் கவுன்சிலிங்கில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளி வழக்கறிகளுக்கு முன்னுரிமை வழங்கலாமே' என கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க:அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details