தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்குத் தள்ளுபடி - ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
Petition to cancel curfew

By

Published : Jun 2, 2021, 7:50 AM IST

திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை அளித்தார். அதில், "கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனால், ஏப்ரல் 18ஆம் தேதிமுதல் கரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரையிலான இரவு ஊரடங்கும் அறிவித்து செயல்படுத்திவருகிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகள் அறிவித்துள்ளனர்.

தேநீர்க் கடைகள், உணவகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பால் விற்பனை செய்பவர்களைப் பாதிக்கிறது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் உணவின் விலையை அதிக அளவு நிர்ணயம்செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கால் மட்டும் கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாள்களில் இரவு ஊரடங்கு ஆகியவற்றிற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் அரசின் சில அரசாணைகளை எதிர்த்து மனு தாக்கல்செய்துள்ளார். ஆனால், அரசு அதற்குப் பின்பாகப் பல்வேறு நிபந்தனைகள் விதித்து புதிய அரசாணைகள் விதித்துள்ளதால் மனுதாரரின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details