தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிஎம் கட்சி குறித்து அவதூறு; பாஜக நிர்வாகி சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் - BJP

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு தெரிவித்ததால், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் SG சூர்யாவிற்கு ஜூலை 1 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதி வீட்டின் முன்பாக சூர்யாவை அழைத்துச்சென்ற காவல்துறை வாகனத்தை மறித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 18, 2023, 10:12 AM IST

பாஜக நிர்வாகி சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

மதுரை: மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்' குறித்தும் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி' குறித்தும் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் கடந்த 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி கடந்த 12ஆம் தேதியன்று முன்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசன், மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சென்னையில் வைத்து பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் SG சூர்யாவை ஜூன் 16ஆம் தேதி இரவு கைது செய்தனர். இதனையடுத்து நேற்று (ஜூன் 17) காலையில் SG சூர்யாவை மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி நீதிபதிகள் குடியிருப்புப் பகுதியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற 'நீதிபதி ராம்சங்கரன்' முன்பாக ஆஜர்படுத்தினர். இதனையடுத்து 3 மணி நேரமாக இரு தரப்பினரும் வாதங்களை எடுத்துரைத்தனர். இதனைத்தொடர்ந்து வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி SG சூர்யாவை, ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கிரானைட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 வாரத்தில் முடிவு எடுக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு கெடு!

இதனையடுத்து SG சூர்யாவை மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர். நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி வீட்டின் முன்பாக பாஜகவினர் சிறிது நேரம் காவல்துறையினர் வாகனத்தை மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, காவல்துறையினர் மற்றும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களைக் கலைய செய்தனர்.

முன்னதாக நீதிபதி வீட்டின் முன்பாக SG சூர்யாவை ஆஜர்படுத்தியபோது, ஏராளமான பாஜகவினர் கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'உதவி ஆணையர் சூரக்குமரன்' தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.

சிறைக்கு அழைத்து சென்றபோது வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா: "ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டப்படும்" என்றார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரம் திமுக பாஜக இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான SG சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:என்னுடன் விஜய் ஒத்துப்போகிறார் - கார்த்தி சிதம்பரம் கொடுத்த அந்த ரியாக்‌ஷன்!

ABOUT THE AUTHOR

...view details