தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

மதுரை: தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தளம் அமைக்க வேண்டும், மதுரையை சுற்றியுள்ள பகுதியை முறையான ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

By

Published : Dec 19, 2020, 6:57 PM IST

மதுரை
மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இங்கு உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோயிலில் புனரமைப்பு பணிக்காக கோயில் அருகே நிலத்தைத் தோண்டியபோது பழங்கால கல்வெட்டுகள், கற்கள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் அங்குள்ள தூண்களில் தமிழ்ப் பிராமி (தமிழி) எழுத்துக்கள் இருப்பதும் அந்த கல்தூணில் 'ஏகன் ஆதன் கோட்டம்' என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த கல்வெட்டு கி.மு.1ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இக்கோயிலில் கி.மு ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டுக்களும் கிடைத்தன.

நீதிபதி கிருபாகரன் செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஏகநாதர் கோயிலில் கிடைக்கப்பட்ட கல்வெட்டுகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் இன்று (டிச.19) பார்வையிட்டார்.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் பார்வையிட்டு கோயில் வரலாறு தொடர்பான விளக்கங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கிருபாகரன், இப்பகுதியில் தமிழின் தொன்மையை நிலைநாட்ட கூடிய இடங்கள் அதிகமாக உள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா தளத்தை தொல்லியல் துறை ஏற்பாடு செய்தால் தமிழின் தொன்மையையும் தமிழ் கலாச்சாரத்தையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகையில் தொல்லியல் துறை ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details