தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் தோரணக்கல்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரம்: விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள் - additional bus stand at Karur Thoranakkalpatti

மதுரை: கரூர் நகராட்சி பகுதியில் தற்காலிகமாக கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனக் கூறி விசாரணையை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் .

கரூர் தோரணக்கல்பட்டியில்  கூடுதல் பேருந்து நிலையம்
கரூர் தோரணக்கல்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம்

By

Published : Feb 19, 2021, 7:29 PM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, நேற்று (பிப்.18) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "கரூர் நகராட்சி பகுதியில் முத்துகுமாரசுவாமி பேருந்து நிலையம் உள்ளது. அதிக நெருக்கடியால் நகரின் வெளிப்பகுதியில் கூடுதல் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் கட்ட கடந்த முடிவானது. இதன்படி, கருப்பம்பாளையத்திற்கு உட்பட்ட பகுதியில் கூடுதல் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் கருப்பம்பாளையத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனிடையே, தற்போது தோரணக்கல்பட்டி பகுதியில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம், வணிக வளாக கட்டிடம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. இங்கு பேருந்து நிலையம் அமைவதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. எனவே, தோரணக்கல்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணைக்கும், இதற்கான டெண்டர் அறிவிப்பிற்கும் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

கரூர் தோரணக்கல்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம்
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், "அரசு தரப்பில் தற்காலிகமாக கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம். தற்காலிகமாக கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்" எனக் கூறி விசாரணையை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details