முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைவராக இருந்தபோது தன்னுடைய ஆதரவாளர்கள் சிலர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அவரது மகன் அழகிரி பல்வேறு வகையிலும் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.
இதற்கு மு.க. ஸ்டாலின்தான் காரணம் என அவர் குற்றஞ்சாட்டி, தனது தம்பியை பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் மு.க. ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது எனவும் தொடர்ந்து பேசினார்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று (மே.7) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பதவி ஏற்புக்கு முன்னதாகவே தனது தம்பி ஸ்டாலினுக்கு, அழகிரி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தம்பி வா தலைமை ஏற்க வா: அழகிரி ஆதரவாளர் போஸ்டர் - முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அவரது தம்பி ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து இதயங்களே எனக் குறிப்பிட்டு மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தம்பியை வாழ்த்தும் அண்ணன் ஆதரவாளர்களின் சுவரொட்டிகள்!
இதையும் படிங்க:நான் திராவிடன் - அண்ணா வழியில் ஸ்டாலின்!