கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்து தேர்வு மையம் இருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிற்கும் கடிதங்களை எழுதியுள்ளார்.
கல்பாக்கத்தில் வேலை: மும்பையில் தேர்வு மையமா? சு.வெங்கடேசன் மோடிக்கு கடிதம் - தொடர் பாரபட்சம் - சு.வெங்கடேசன் மோடிக்கு கடிதம்
மதுரை: கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணிக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் இருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் மையத்தை அறிவிக்குமாறு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பிரதமருக்கு கோரிக்கை.
அந்த கடிதத்தில், "பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை எண் 1/2020 ல் Stipendiary Trainees Categories I, II & Category II (C) ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் இருப்பவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பை அளிக்கிறது. இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க:கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!