மதுரை: தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக விதைகளுக்கு பயிர் கடன் வழங்குதல், உர விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன்.9) நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ’விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குறைவின்றி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரத்து 10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா தொற்று நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.