தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி உரிமையாளர் வீட்டில் 19 சவரன் நகை, 55000 ஆயிரம் கொள்ளை - crime news madurai

மதுரை: சீமான் நகரில் லாரி உரிமையாளர் வீட்டில் 19 சவரன் நகை, 55000 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

லாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளை
லாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளை

By

Published : Jun 3, 2020, 7:10 PM IST

மதுரை மாவட்டம் சிவகங்கை ரோடு சீமான் நகரைச் சேர்ந்தவர் பிரபு. அவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு தன்னுடைய மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய அவர், கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் நகை, 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

லாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளை

இது குறித்து அண்ணாநகர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details