சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மிட்டா மிராசுதாரர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவார்களே தவிர ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்றார். காங்கிரஸில் தற்போது பெரும்பான்மையானவர்கள் பின்புலம் வசதி படைத்தவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரன் ஆவார் எனக் கூறினார்.
நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா - அமைச்சர் கேள்வி - doesn't even have a rupee
மதுரை: காங்கிரஸில் ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை மிட்டா மிராசுதாரர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது எனவும் நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
அதிமுக இயக்கம் அண்ணாவின் வழியாகவே நடைபெற்றுவரும் நிலையில் எளியவர்கள் கூட சட்டமன்ற உறுப்பினராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது"- ஸ்டாலினை வம்பிழுத்த அமைச்சர்!
Last Updated : Oct 1, 2019, 1:23 PM IST