மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனை மதுரைமாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேவுள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மதுரையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் மாசி வீதிகளில் அம்மன் மற்றும் சாமியின் வீதியுலாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடவுளைத் தரிசித்து வருகின்றனர்.
விழாக்காலம் என்றபோதும்கூட மதுரை மல்லிகை கிலோ 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சி 300 ரூபாய், முல்லை 300 ரூபாய், பட்டன் ரோஸ் 80 ரூபாய், சம்பங்கி 50 ரூபாய், சென்டு மல்லி 50 ரூபாய், கனகாம்பரம் 400 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “தற்போது சீஸன் என்பதால் மதுரை மாவட்டம் முழுவதும் மல்லிகைப்பூக்களின் வரத்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 டன் அளவிற்கு உள்ளது. இதன் காரணமாக மல்லிகைப்பூவின் வியாபாரமும் சூடு பிடித்து வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:தாறுமாறாக விலை ஏறும் பூக்கள்... மகிழ்ச்சியில் பூ வியாபாரிகள்..