தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தைப்பூசத்தை முன்னிட்டு மல்லிகை விலை உயரும்’: காத்திருக்கும் பூ வியாபாரிகள் - தைப்பூசத்தில் மல்லிகை விலை

மதுரை: தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமான அளவில் உயரும் என மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

merchants
பூ வியாபாரிகள்

By

Published : Jan 25, 2021, 7:36 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள மலர் சந்தையில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

மல்லிகை பூ

நாள்தோறும் இங்கு 50க்கும் மேற்பட்ட டன் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மதுரை மல்லிகை இந்த மலர் சந்தையில் இருந்து வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. இங்கு நிர்ணயம் செய்யப்படுகிற விலைதான் தமிழ்நாடு அளவில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மலர் சந்தை விலை விவரம்

கிலோ ஒன்றிற்கு,

  • மல்லிகை -2,500 ரூபாய்
  • பிச்சி - 1,200 ரூபாய்
  • வெண் பிச்சி - 1,500 ரூபாய்
  • முல்லை - 2,000 ரூபாய்
  • கனகாம்பரம் - 1,500 ரூபாய்
  • மெட்ராஸ் மல்லி - 1,200 ரூபாய்
  • அரளி - 400 ரூபாய்
  • செவ்வந்தி - 150 ரூபாய்
  • பட்டன் ரோஸ் -150 ரூபாய்
  • பட் ரோஸ் - 150 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அடுத்து வருகின்ற நாள்களில் பூக்களின் விலை கணிசமாக உயரும் என மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details