தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மல்லிகையின் விலை குறைவு! - Madurai Jasmine flower low

மதுரை: மலர் சந்தைக்கு மல்லிகை பூ வரத்து அதிகமானதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700க்கு விற்பனையானது.

மல்லிகை பூ விலை குறைவு  மதுரை மல்லி  மல்லிகை பூ விலை  மதுரை மல்லிகை பூ விலை  Jasmine flower price is low  Jasmine flower  Madurai Jasmine  Madurai Jasmine flower low  Jasmine flower price is low in Madurai
Jasmine flower price is low in Madurai

By

Published : Feb 9, 2021, 10:54 PM IST

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமில்லாமல், விருதுநகர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலர்கள் மொத்த விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதியாகின்றன.

இன்றைய பூக்கள் நிலவரத்தை பொறுத்தவரை மல்லிகைப் பூவின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதால், கிலோ 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ ரூ.600, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.150, சென்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.150, வெள்ளை செவ்வந்தி ரூ.180, தாமரை ஒன்றுக்கு ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,"பூக்களின் விளைச்சல் மிகச் சிறப்பாக உள்ளதால், மல்லிகைப் பூவின் வரத்து தற்போது நாளொன்றுக்கு 2 டன் அளவுக்கு உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு விலை கூட வாய்ப்பு உண்டு" என்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கால் மல்லிகைக்கு மவுசு குறைந்தது: நிவாரணம் கோரும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details