Madurai Flower Price Today: மதுரை:மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. அதன் நறுமணம் மற்றும் தரம் ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற திகழ்கிறது, மதுரை மல்லி. தற்போது நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகையின் இன்றைய விலை கிலோ ரூ.2,500 என நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது.