தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு; ஆன்லைன் விண்ணப்பம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை.. - பாலமேடு ஜல்லிக்கட்டு

Madurai Jallikattu Online Registration: பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க கூடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

மதுரை மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மதுரை மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:51 PM IST

மதுரை:தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கக் கூடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15ம் தேதி அன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16 மற்றும் 17ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 11ம் தேதி மதியம் 12.00 மணி வரை பதிவு செய்திட வேண்டும். அதே போல் மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10ம் தேதி மதியம் 12.00 முதல் 11ம் தேதி மதியம் 12.00 மணி வரை பதிவு செய்திட வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மார்ச் மாதம் களமிறங்கும் RAPTEE எலக்ட்ரிக் பைக்.. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பெரும் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details