சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி ஆவுடையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, அடைக்கலம்பட்டியில் ஜூலை மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். அதைத்தொடர்ந்து அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும்.
ஜல்லிக்கட்டு காலவரையறை வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
மதுரை: ஜல்லிக்கட்டு காலவரையறை வழக்கில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் ஜனவரி முதல் மே வரை மட்டுமே நடத்த வேண்டும் எனக்கூறி அதற்கு அனுமதி வழங்கவில்லை. இது ஏற்புடையது அல்ல; எனவே, ஜல்லிக்கட்டு காலவரையறையை மாற்றி, ஆண்டு முழுவதும் நடைபெறுமாறு உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கில் அரசியலமைப்பு விதி மீறலிருந்தால் நீதிமன்றம் தலையிடலாம், அதே நேரத்தில் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காப்பகம் - தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுக்க உத்தரவு