தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு: பட்டியலின மக்களின் காளையை அவிழ்க்கும் விவகாரம்; கலெக்டரிடம் மனு கொடுக்க ஆணை - மதுரை செய்திகள்

மதுரை அருகே உள்ள பாலமேட்டில் பட்டியிலின மக்கள் பராமரித்து வரும் பாறைக்கருப்பசாமி கோயில் காளையை வரும் தை மாதம் 2 -ம் நாள் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலமேட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு- ஆட்சியர் உத்தரவு
பாலமேட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு- ஆட்சியர் உத்தரவு

By

Published : Jan 12, 2023, 4:26 PM IST

மதுரைஅருகே பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் எங்கள் ஊரில் உள்ள அனைத்து சமுதாய உறவின் முறைக்கு சொந்தமான கோயில்களில் காளைகளை வாடி வழியாக கொண்டு செல்வது வழக்கம். ஆனால், சில ஆண்டுகள் காலமாக பாலமேடு பாறைக்கல் தெருவில் அமைந்துள்ள பாறைக்கருப்பசாமி கோயில் காளையை தீண்டாமை காரணமாக, மஞ்சமலை ஆற்றில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் வாடி வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர்.

பட்டியலின சமூகத்தினர் முறை சார்பில் பராமரித்து வரும் பாறைக்கருப்பசாமி கோயில் காளையை வரும் தை மாதம் 2-ம் நாள் ( 16.01.2023 ) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு, 'அங்குள்ள விழா கமிட்டியில் உள்ள சமுதாய கோயில் காளைகள், ஜல்லிக்கட்டுக்கு முன்னதாக அவிழ்த்து விடப்படும். எனவே, எங்கள் காளையினையும் அவிழ்த்து விட அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் , 'பாலமேட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களில் வளர்க்கப்படும் கோயில் காளைகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் உறவின்முறை ரீதியாக வளர்த்த காளைக்கு அனுமதி கேட்கின்றனர்' எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர், இன்று மாலை 5 மணிக்குள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் எனவும்; மாவட்ட ஆட்சியர் , உரிய விதிமுறைப்படி பரிசீலனை செய்து தகுதி இருப்பின் முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சேது சமுத்திர திட்டம் தேவை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details