தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழில் தேர்வு: இஸ்ரோ பரிசீலனை செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி., தகவல் - ISRO to review exam in Tamil: S. Venkatesh MP Information

பாரபட்சத்தை கைவிட்டு, தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.

தமிழில் தேர்வு: இஸ்ரோ பரிசீலனை செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்
தமிழில் தேர்வு: இஸ்ரோ பரிசீலனை செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

By

Published : May 8, 2022, 10:13 PM IST

மதுரை:தமிழ்நாட்டில் இயங்கிவரும் இஸ்ரோ தனது தேர்வுகளை தமிழிலும் நடத்த பரிசீலனை செய்வதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி உந்தும் வளாகம் (ISRO Propulsion Complex) இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை (IPRC/RMT/2019/3/22.09.2019 & IPRC/ RMT/ 2019/2 ) வெளியிட்டு எழுத்துத்தேர்வுகளையும் கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவிலிலும் நடத்தியுள்ளது.

அது "சி" பிரிவு, "பி" பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும். அவை அனைத்துமே சாதாரண நிலையில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான தேர்வு. ஆனால் எழுத்துத் தேர்வில் வாகன ஓட்டுநர், சமையலர் பதவிகளுக்கான கேள்வித்தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றிருந்தது. மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித்தாள்கள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பொருத்துபவர் (Fitter), பற்ற வைப்பவர் (Welder) போன்ற பதவிகளும் அதில் அடக்கம்.

பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப்படிப்பு முடித்தவர்களே. தமிழ் வழிக்கல்வியில் வந்தவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள். எனவே, தமிழ் வடிவக்கேள்வித்தாளுடன் மறுதேர்வை நடத்த வேண்டுமென 20.04.2022 அன்று விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு IPRC/DR/RMT/01/ 06.05.2022 தேதியிட்டு பதிலளித்துள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் டி. அழகுவேலு தேர்வு குறித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இக்கோரிக்கை சம்பந்தமாக விண்வெளித்துறைக்கு பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி மாநில மொழிகளிலும் எதிர்கால நியமனங்களில் நடத்த வழிகாட்டல் கேட்டு எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேர்வுகள் பற்றிய பதில் மகிழ்ச்சிதான். நடந்து முடிந்த தேர்வில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டுமே என்ற கேள்வி இன்னும் எஞ்சி நிற்கிறது’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? - சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details