கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது தவிர அந்த இளைஞருடன் இருந்த அவரது நண்பர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் என அனைவரும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் தேனி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை வசதிகளுடன் கூடிய 33 படுக்கைககள் கொண்ட தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த பிரிவில் வைரஸை எதிர்கொள்ள தேவையான அனைத்து மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.