மதுரை மத்தியச் சிறைக் கைதி ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது. அந்த ஆடியோவில், மதுரை மத்தியச் சிறைக்குள் ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கிறது என்றும், சிறை நிர்வாகம் அதுபற்றி கண்டுகொள்ளததோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரை மத்தியச் சிறையில் கைதிக்கு கரோனாவா?
மதுரை: மத்தியச் சிறையில் கைதி ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆடியோ குறித்து சிறைத்துறை வட்டாரங்கள், "இது தவறான பதிவு. சிறை வளாகத்திற்குள் கரோனா தொற்றைத் தடுக்க, முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, மதுரையில் கைதாகும் நபர்கள் விருதுநகர் சிறையிலுள்ள தனி அறையில் அடைக்கப்பட்டு, 15 நாள்கள் தொடர் கண்காணிப்புக்குளுக்குப் பின், அவர்களுக்குத் தொற்று அறிகுறி இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே மதுரை சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை ஊரடங்கு காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது" என்று தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:ஊரடங்கால் வெறிச்சோடிய தூங்கா நகரம்!