தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2022, 6:20 PM IST

ETV Bharat / state

ராமேஸ்வரத்தில் இரவு நேர கடைகளை அனுமதித்தால் பிரச்னை - நீதிபதிகள்

ராமேஸ்வரம் பகுதியில் இரவு நேர கடைகளை செயல்பட அனுமதிப்பது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்துவதற்கு வருகை தருகின்றனர். சுற்றுலா தலமாகவும் விளங்குவதால், ராமேஸ்வரம் பகுதியில் சுற்றி உள்ள பொதுமக்கள் அங்கு கடைகள் அமைத்து பக்தர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இரவு 10 மணிக்கு மேல் ராமேஸ்வரத்தில் எந்தக் கடைகளும் செயல்படக்கூடாது என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இரவு நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, பால் உள்ளிட்டவை கிடைப்பதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். எனவே, ராமேஸ்வரம் பகுதியில் இரவு நேரங்களில் உணவு உட்பட அத்தியாவசியக் கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராமேஸ்வரம் பகுதியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இரவு நேர கடைகளை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ராமேஸ்வரம் பகுதியில் இரவு நேர கடைகள் செயல்பட ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:Rain Update: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details