மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் உள்ள சரவணன் என்பவரது தோட்டத்தில், ஒரு வாரத்திற்கு முன்பு வெட்டுக்கிளிகள் சில தென்பட்டன.
இச்சூழலில், வேளாண் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உசிலம்பட்டி வேளாண் உதவி அலுவலர் ராமசாமி நேரடியாக விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டு, இது சாதாரண வெட்டுக்கிளி தான், இதனால் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து, ஐந்து ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த சோளம், தக்காளி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விவசாய தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிப்படைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி... மீறினால் நடவடிக்கை! - அரசு மீது நீதிமன்றம் நம்பிக்கை