தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டின் ரயில் சேவையில் அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்

நாட்டின் ரயில் சேவையில் முக்கிய அங்கமாக அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.

நாட்டின் ரயில் சேவையில் அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்
நாட்டின் ரயில் சேவையில் அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்

By

Published : Oct 17, 2022, 7:13 AM IST

இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அதிவேக ‘வந்தே பாரத் ரயில்’ தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனம், இந்துஸ்தான் அலுமினியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் எலக்ட்ரிக் இரும்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து எடை குறைந்த அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை தயாரித்துள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ள ரயில் பெட்டிகளாகும். இதில் நிலக்கரி, சரளை கற்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை அனுப்ப முடியும். இந்த ரயில் பெட்டிகள் பற்றவைப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டியை விட 3.25 டன் எடை குறைவானதாகும். மேலும் தற்போதைய ரயில் பெட்டிகளைக் காட்டிலும், 180 டன் அதிகமாக சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும்.

எடை குறைவாக இருப்பதால் காலி பெட்டிகள் திரும்பிச் செல்லும்போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும். இதன் மூலம் ஒரு ரயில் பெட்டி தொடர் 14,500 டன்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும். இந்த ரயில் பெட்டிகளை 80 சதவீதம் மறு விற்பனைக்கு உட்படுத்தலாம்.

அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

துரு பிடிக்காது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. தற்போதைய இரும்பு சரக்கு பெட்டிகள் தயாரிக்க நிக்கல், காட்மியம் போன்ற மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இந்த புதிய முயற்சி இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவாணியை சேமிக்கிறது. மேலும் இதன் மூலம் உள்ளூர் அலுமினிய தொழிற்சாலைகள் வளர்ச்சி பெறும்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த சரக்கு ரயில் பெட்டிகள் தொடர், நேற்று (அக் 16) ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு அனுப்பப்பட்டது. இந்த புதிய சேவையை புவனேஸ்வரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:4-வது வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details