தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு இடைக்காலத் தடை! - சமையல் எண்ணெயில் கலப்படம்

மதுரை: சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை (பேக்கிங் செய்யப்படாத) செய்வதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Interim ban on retail sale of cooking oil
Interim ban on retail sale of cooking oil

By

Published : Dec 18, 2020, 12:46 PM IST

மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பொது நல வழக்கு ஒன்றினைத் தாக்கல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.

அதில், "பலர் முந்திரி தோலில் தயாரித்த எண்ணெயை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இக் கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்களை உதிரியாக விற்பனை செய்யக்கூடாது.

பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

அதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை (பேக்கிங் செய்யப்படாத) செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், 2011ஆம் ஆண்டு சட்டத்தின் படி சமையல் எண்ணெய் எவ்வாறு உதிரியாக விற்பனை செய்யப்படுகிறது, எண்ணெய் தரத்தினை ஆய்வு செய்ய அரசு மற்றும் தனியார் ஆய்வங்கள் எத்தனை உள்ளன, மாவட்ட வாரியாக விவரங்களை தெரிவிக்க வேண்டும், தமிழ்நாட்டை அடுத்து மற்ற மாநிலங்களிலும் எத்தனை ஆய்வங்கள் உள்ளன, கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, அதில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை மாவட்ட வாரியாக தெரிவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அசல் தேன் சோதனை: டாபர், பதஞ்சலி உட்பட 17 பிராண்டுகளில் கலப்படம்!

ABOUT THE AUTHOR

...view details