தமிழ்நாடு

tamil nadu

சிஎஸ்ஐ தேர்தலில் அரசு ஊழியர்கள்: ஆட்சியர் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

மதுரை: அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், சிஎஸ்ஐ மண்டல நிர்வாக அமைப்புகளில் இல்லை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உறுதிசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 20, 2021, 3:25 PM IST

Published : Jul 20, 2021, 3:25 PM IST

MDU
MDU

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் பணிசெய்யும் ஊழியர்கள் மதுரை, ராம்நாடு, திருப்பேராயம் தேர்தலில் போட்டியிட இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் சிஎஸ்ஐ தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதுபோன்று போட்டியிட்டு மாவட்ட கல்வி அலுவலர் பதவி ஏற்றால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியைகளை நியமிப்பதில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் கன்னியாகுமாரி மாவட்ட சிஎஸ்ஐ தேர்தலில் போட்டியிட இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் துறை ஊழியர்கள், சிஎஸ்ஐ தேர்தலில் போட்டியிடுவது குறித்து விதிகள் உள்ளன.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், சிஎஸ்ஐ மண்டல நிர்வாக அமைப்புகளில் இல்லை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உறுதிசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஒரு மரத்திற்குப் பதிலாக 10 மரங்கள்' - மதுரையிலிருந்து சென்னைக்கு மாறும் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details