மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பாணையின்படி,
சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா, உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
'தொழிற்சாலைகள் தொடங்கும்முன் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாத தொழிற்சாலைகள் மூடப்படும்.
ஆனால், தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடந்த 7ஆம் தேதி ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பாணை கூறுவது என்ன?இந்த அறிவிப்பாணையில், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் தற்போது இந்த புதிய அறிவிப்பாணையின்படி, தற்போது சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.