சிவகங்கை: சிங்கம்புணரியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சிங்கம்புணரி பகுதியில் சுமார் 70,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த டவுன் பஞ்சாயத்தில் மக்கள் கூடும் ஒரே இடமாக சீரணி அரங்கம் உள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பால்குடம் எடுப்பது, மஞ்சுவிரட்டு நடத்துவது போன்ற பொது நிகழ்வுகள் இந்த அரங்கத்திலேயே நடத்தப்படும். இந்த அரங்கம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகும். இந்த நிலையில் சிங்கம்புணரியின் டவுன் பஞ்சாயத்து தலைவர், சீரணி அரங்கத்தை எடுத்து விட்டு டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் புதிய வணிக வளாகம் கட்ட முயற்சி செய்து வருகிறார்.
சிங்கம்புணரி டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக 15 ஏக்கர் காலியிடம் உள்ள நிலையில், அங்கு இந்த கட்டடத்தை கட்டாமல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள சீரணி அரங்கத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள அரசு பள்ளி நிகழ்வுகள் இந்த அரங்கத்தில்தான் நடத்தப்படும்.