தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்! - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை: குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறை சார்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றது.

மதுரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்  கண்காணிப்பு கேமராக்கள்  Surveillance cameras  Intensity of work to install surveillance cameras in Madurai  காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா  Commissioner of Police Prem Anand Sinha  மதுரை மாவட்டச் செய்திகள்  Madurai District News
Intensity of work to install surveillance cameras in Madurai

By

Published : Dec 19, 2020, 10:24 AM IST

மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியான மாடக்குளம் கிராமத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பகுதிகள்

மதுரை பொன்மேனி, அம்பேத்கர் சிலை, அரசு மாணவர் விடுதி, மாடக்குளம் பிரதான சாலை, போடி ரயில்வே லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் முதல்கட்டமாக 60 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகின்றது.

தீவிரமாக நடைபெற்றுவரும் சிசிடிவி பொருத்தும் பணி

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது ஏன்?

காவல் துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிளவர்சீலா மேற்பார்வையில் இந்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால் குற்றங்கள் குறையும் எனவும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

மதுரை மாநகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே காவல் துறையின் சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருடனை விரட்டியடித்த காவலாளி - சிசிடிவி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details