தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்: தகவல் தந்தால் சன்மானம் - மதுரை மாநகர காவல் ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

மதுரை: அத்தியாவசியப் பொருட்களை பதுக்கும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவித்துள்ளார்.

madurai adgp
madurai adgp

By

Published : Apr 8, 2020, 9:52 AM IST

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை பதுக்கும் நபர்கள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், ”மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றனவா? என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், அது எந்தெந்த பொருட்கள்? என்பதை 0452-2531044, 0452-2531045 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவற்றை உங்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான முயற்சிகளில் காவல் துறை ஈடுபடும்.

இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைக்காரர்கள் எவரேனும் அதிக விலைக்கு விற்பதாக தெரிந்தால், அது குறித்தும் எங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை யாராவது பதுக்கல் செய்கிறார் என்றால், அது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் தெரிவித்த தகவல் சரியாக இருக்கும்பட்சத்தில், காவல்துறை சார்பில் தகுந்த சன்மானம் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details