தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ஐநாவில் கர்ஜித்த மதுரை மாணவி! - ஐநாவில் மதுரை மாணவி

மதுரை: இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகள், நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை குறித்து ஐநாவில் உரைநிகழ்த்தியதாக மதுரை மாணவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Madurai Girl

By

Published : Oct 7, 2019, 12:42 PM IST

Updated : Oct 7, 2019, 1:27 PM IST

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிரேமலதா எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் மிக ஆர்வத்தோடு பங்குபெற்றவர் ஆவார். தற்போது கல்லூரியில் படித்துவரும் பிரேமலதா, ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சிலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ஐநாவில் கர்ஜித்த மதுரை மாணவி!

மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்து பிரேமலதா ஐநாவில் பேசினார். இந்நிலையில், தன் உரை குறித்து பகிர்ந்த பிரேமலதா, "என் பள்ளியில் மனித உரிமைகள் குறித்து கற்றேன். பாடத்திட்டத்தில் மனித உரிமைகள் ஏன் இடம்பெற வேண்டும் என்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளேன். சமூகத்தில் நிலவும் சாதிய கொடூரங்கள் குறித்து சிறுவயதிலிருந்து உணர்ந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும், "இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து ஐநாவில் பேசினேன். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிராக உள்ளது. அதன் முடிவுகள் சாதியைச் சார்ந்துள்ளது. பல மாணவர்கள் இதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்கையில் நிலையான வளர்ச்சி எப்படி பெறமுடியும்" என்றார்.

Last Updated : Oct 7, 2019, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details