அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மகேந்திரனின் சகோதரரான வெற்றியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
12 இடங்கள்.. 12 குழுக்கள்.. 2 நாள்கள்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான வெற்றி என்பவருக்கு சொந்தமான திரையரங்குகள், கட்டுமான நிறுவனம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 12 இடங்களில் இரண்டு நாள்களாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
அம்பலமான அமமுக பிரமுகர் சகோதரரின் மோசடி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் 12 குழுக்களாக சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
20% எப்படி 2% ஆனது?
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் மூன்று கோடி கைப்பற்றப்பட்டதுடன், 20 விழுக்காடு வரி வருவாயை வெறும் 2 விழுக்காடாக குறைத்து காண்பித்து வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூபாய் 170 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமமுக நிர்வாகியின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு!