இதுகுறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என மாநிலம் முழுவதும் நாங்கள் கருத்து கணிப்பு நடத்தினோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு- கருத்துகணிப்பில் தகவல் - கருத்துகணிப்பு
மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.
கல்லூரி முன்னாள் மாணவர்கள்
இதில் வாக்குப்பதிவு நடந்த 38 தொகுதிகளில், திமுக 33 தொகுதிகள் மட்டுமில்லாமல் நாகை, மயிலாடுதுறை போன்ற கூடுதல் தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேபோல் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.
மேலும் இந்த தேர்தல் மூலம் ஆட்சிமாற்றம் வேண்டுமென்று மக்கள் அனைவரும் விரும்பி வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.