தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,200 காவலர்கள் - மாவட்ட தேர்தல் அலுவலர் - பாதுகாப்பு பணி

மதுரை : மக்களவைத் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் 2,200 காவல் துறையினர் ஈடுபடுவதாக மாவட்டத் தேர்தல் அலுவலருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்

By

Published : Apr 12, 2019, 9:36 AM IST

இது குறித்து அவர் கூறியதாவது, 'மதுரை மாவட்டத்தில் 11,258 அரசு ஊழியர்கள் மற்றும் 2,815 காவல் துறையினர் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். அவர்களுக்கான வாக்கு சீட்டுகள் கொடுக்கும் பணிகள் இன்று நிறைவு பெறும்.தபால் ஓட்டுகள் 100% பதிவாகும் வண்ணம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 1500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக் கோரி 1009 மனுக்கள் வந்த நிலையில், 944 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 27 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யவில்லை' என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details