மதுரை:சேலத்தில்கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் பணியில் இருந்த ராணுவ வீரர் இறந்ததையடுத்து அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் காலணி வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் 3 நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து மாவட்ட கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தனர்.