நாடு முழுவதும் இன்று (செப்.13) நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 3,843 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 பரவல் காரணமாக ஒரு தேர்வு அறையில் 12 பேர் வரை தேர்வு எழுதுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் தற்போது கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வு நடைபெறுவதால் மாணவர்களும் பெற்றோரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இன்று சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிகின்றனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தருந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.