மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக உயர்மட்ட பாலங்கள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடைகள் சீரமைப்பு என மதுரை மாநகர் முழுவதும் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
மதுரை சாலைகளில் வீணாய் போகும் குடிநீர்! இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்போலவே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக காளவாசல் சந்திப்பில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பால பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை சாலைகளில் வீணாய் போகும் குடிநீர்! இதில் காளவாசல் சந்திப்பு உயர்மட்ட பாலத்தின் கீழே இன்று ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக சாலை தோண்டும் பணி நடைபெற்றபோது, குடிநீர் பைப் உடைந்து சாலையில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை மாநகராட்சியில் தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது.
மதுரை சாலைகளில் வீணாய் போகும் குடிநீர்! தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் விரைவாக உடைந்த குடிநீர் பைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதைத் தடுத்தனர். இது போன்ற பணிகளில் குடிநீர் குழாய்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் கவனம் கொடுத்து செய்யவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க...'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்