மதுரை மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வளர்ந்த மரங்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் அங்கு வெட்டப்பட்ட மரங்களின் கிளைகளில், மரங்களே பேசுவது போன்ற பதாகைகளை ஒட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பதாகைகளில், அறிவில்லாத அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் நாங்கள்... இப்படிக்கு மரங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குபேந்திரன் கூறுகையில், “தொடர்ந்து தமிழ்நாடு அரசும், மதுரை மாநகராட்சியும் மரங்களை வெட்டுவதையே நோக்கமாகக் கொண்டு திட்டங்களை தீட்டுகின்றதோ என்று எண்ணுமளவிற்கு செயல்படுகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரை மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அடர்த்தியான மரங்களை மின் கம்பங்களை காரணம் காட்டி வெட்டி வருகின்றனர்.