தமிழ்நாட்டில் கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.