மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதான நடவடிக்கையை மதுரை மாநகர காவல் துறை துரிதப்படுத்திவருகிறது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் (POCSO ACT (Protection of Children from Sexual Offences) 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 109 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு - 109 பேர் கைது! - 2019 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு தரவு
மதுரை: போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டில் 109 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் 150 பேர் கைது!
அவர்களில் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 107 நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தரும் வகையில் புலன்விசாரணையை துரிதப்படுத்த மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது!
Last Updated : Feb 7, 2020, 5:55 PM IST