அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்றவர்கள் சிறைப்பிடிப்பு - அனுமன் சேனா
மதுரை: திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்ற அனுமன் சேனா நிர்வாகிகள் 11 பேர் உள்பட மூன்று விநாயகர் சிலையை காவல் துறையினர் சிறைப்பிடித்தனர்.
![அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்றவர்கள் சிறைப்பிடிப்பு சிறைப் பிடிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:08:59:1597999139-tn-mdu-01-vinayagar-statue-issue-script-visual-21082020121837-2108f-1597992517-663.jpg)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 21) விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் சரக்கு வாகனத்தில் 9 அடி விநாயகர் சிலை, 3 அடி விநாயகர் 2 சிலைகளுடன் ஊர்வலமாகத் திருப்பரங்குன்றம் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா தலைமையிலான காவல் துறையினர் அனுமன் சேனை ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரையும், அவர்களிடமிருந்த மூன்று விநாயகர் சிலைகளையும் சிறைப்பிடித்தனர்.