மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, "ராமநாதபுரத்தில் பல கட்சிகளைச்சேர்ந்தஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளனர்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே தற்போது மதுரை வந்துள்ளேன்.மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உருவாக்கியுள்ளோம்.
ராஜீவ் காந்தி முடியவில்லை என்றதை நாங்கள் முடித்து காட்டியுள்ளோம்- இல. கணேசன் - இல. கணேசன்
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முடியவில்லை என்றதை, நாங்கள் முடித்து காட்டியுள்ளோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த நலத்திட்ட உதவிகள் மூலமாகவே பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எனவே அவர் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு முறை நாங்கள் செயல்படுத்தும் திட்டத்தை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்மக்களுக்கு நாங்கள் சென்றடைய வேண்டிய பணத்தையும், நிதியையும் முழுமையாக வங்கிகள் மூலம் கொண்டு சென்றுள்ளோம்.
நாங்கள் எங்களது ஆட்சியில் செய்ய நினைத்து செய்யாமல் போனது என்னவென்றால், நாட்டில் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்யாமல், தனது மக்களுக்கு மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார், யார் என முழுமையாக கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது தான். இதுதான் எங்கள் திட்டம். ஆனால் அதை கடந்த ஐந்தாண்டுகளில் முழுமையாக முடிக்கவில்லை, அதனால் மேலும் ஐந்து ஆண்டுகள் தாருங்கள் என வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்"இவ்வாறு அவர் கூறினார்.