உயிர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாகக் கொண்ட 11ஆவது மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை சார்பில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.
இதில், வரும் 2024ஆம் ஆண்டிற்குள் மின்னணு பொருள்கள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்திசெய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மின்னணு துறையில் மதிப்புக்கூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், பயிற்சிபெற்ற பெண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயிற்சி மானியம் வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கிசான் முறைகேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை நடத்தி முறைகேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும்.