தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும் - திருதொண்டர்கள் சபை தலைவர் - கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டம்பாயும்

மதுரை: கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருதொண்டர்கள் சபை தலைவர் பேட்டி
திருதொண்டர்கள் சபை தலைவர் பேட்டி

By

Published : Nov 28, 2019, 11:21 PM IST

மதுரை விமான நிலையத்தில் தமிழக கோயில் நிலங்களை மீட்டெடுக்கும் திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசினுடைய கொள்கை விளக்க குறிப்பில் இந்து சமய அறநிலையத்துறை இந்து கோயிலுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மையில் 15 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கும். இதில் 2020-க்குள் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு முழுமையாக மீட்டு கோயில்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் முழுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த திட்டம் உள்ளாட்சித் துறை, காவல்துறை, நில அளவியல் துறை அலுவலர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும்.

மேலும் யார், யாரெல்லாம் திருக்கோயில்களின் இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்களோ? அல்லது குற்ற செயலில் ஈடுபடுகிறார்களோ? அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தினால் ரூ.100 கோடி அளவிலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

திருதொண்டர்கள் சபை தலைவர் பேட்டி
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஐந்து ஆண்டுகள் திருக்கோயில் இடங்களில் இருந்தால் அது இருக்கும் நபர்களுக்கு சொந்தம் எனக்கூறியது குறித்த கேள்விக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர் எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறிப்பதற்கு உரிமை யாருக்கும் கிடையாது. கூட்டங்களை சேர்த்துக் கொண்டு அதன் மூலம் ஆதாயம் தேடுவது பாரத நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார்.


இதையும் படிங்க:கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஐ-எம் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details