தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி - FASTAC

மதுரை: குழந்தைகள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டாது.

மதுரை
ICDS staff awareness program

By

Published : Dec 5, 2019, 9:38 AM IST

குழந்தைகள் ஆரம்பப்பள்ளியில் சேர்ப்பதற்குமுன் அங்கன்வாடியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி ஆசிரியர்கள் பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவு, நல்லொழுக்கம், அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது.

அதன்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தமிழக குழந்தைகள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வுபயிற்சி அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக அரசு உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி மதுரை மாவட்ட நியமன அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் வெலின்டா, உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உணவில் குறைவான உப்பு, குறைவான கொழுப்பு தரமான உணவு தயாரித்து குழந்தைகள், பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி.

தொடர்ந்து கலப்படமில்லாத உணவு பொருட்களை பயன்படுத்துவது, பொதுமக்களிடையே உணவு பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 21ஆம் நூற்றாண்டிலும் விறகடுப்பு சமையல்!

ABOUT THE AUTHOR

...view details