மதுரை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் மூன்று நகராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சியின் இரண்டு தனித்தனி வார்டுகளில் திமுக சார்பில் கணவன், மனைவி இருவரும் போட்டியிட்டிருந்தனர்.